நெமிலி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

X
நெமிலி அருகே உள்ள ஓச்சேரி பகுதியில் நேற்று (ஜூன் 6) இரவு 7 மணியளவில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வேதாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

