காவேரிப்பாக்கம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!

வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!
காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ராதா, ருக்மணி சமேத வேணுகோபா லசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விக்ரகங்கள் கரிகோலம், கலச பூஜைகள், ஹோமங்கள், திருமஞ்சனம், பூர்ணாஷூதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. ஹோமம், பூர்ணஹூதி, கலச புறப்பாடு நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் விழா நடை பெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் நாடகம்,கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story