சங்கரண்டாம்பாளையம் அகிலாண்டீஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

தாராபுரம் சங்கரண்டாம்பாளையம் அகிலாண்டீஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தாராபுரம் அருகே சங்கரண்டாம் பாளையம் பகுதியில் கொற்றை மாநகர் என்னும் கொத்தனூர் அகிலாண்டீஸ்வரி உடனமர் ஸ்ரீ தென்னீஸ்வரசாமி கோவில் உள்ளது. தென்கரை நாடுதனில் ஈசன் எழுந்தருளியுள்ளதால் தென்னீஸ்வரர் என்னும் திருநாமம் தாங்கி அகிலத்தை ஆளுகின்ற ஈஸ்வரியாக அகிலாண்டீஸ்வரி அம்பிகையுடன் இத் தலத்தில் அணுகிரகம் செய்து வருகிறார். 2-ம் குலோத் துங்க சோழன் காலத்தில் சோழ மன்னருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசமானது விலகுவதற்காக கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதன் பிற்காலத்தில் தென்கரை நாட்டின் பட்டக்காரர் வேணாவுடையார் வம்ச வழியினரால் பராமரித்து பூஜைகளும் உற்சவங்களும் நடத்தி வருகின்றனர். தற்போது பரம்பரை தர்மகர்த்தா ச.க. சேது ராஜேஸ்வரன் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. மேலும் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. விழாவில், மணிப்பூர் தலைமை நீதிபதி கிருஷ் ணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவருமான கே.எஸ் .என். வேணுகோபாலு -தேன்மொழி தம்பதியினர் வரவேற்றனர். மாவட்ட நீதிபதி சக்திவேல், தாராபுரம் மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி, புனிதம் அர்ஜுன், சுகன்யா சம்பத், ஸ்ரீ லட்சுமி அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாகிகளான கே.என் மணிவண்ண சதேவன், கே.என்.கவுதம செந்தில்வர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story