பக்ரீத் திருநாளில் இல்லாதவருக்கு நம்மால் இயன்ற பொருளுதவி வழங்கி கொண்டாடுவோம்

X
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை அறங்காவலர் மற்றும் நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமாகிய செய்யது முஹம்மது கலிஃபா சாஹிப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது அல்லாஹ்விற்காக தியாகம் செய்து, நல்லமல்கள் செய்து புனித ஹஜ் மாதத்தில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ‘ஈதுல் அதா’ பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சி. பெருநாளைக் கெண்டாடுகின்ற நாம், நமக்குள் ஒற்றுமையாகவும், இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஒற்றுமையாகவும், அமைதியாகவும், வாழ்ந்து இந்த நாட்டை சமாதானப் பாதையிலும், வளர்ச்சிப் பாதையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான பங்களிப்பின் முக்கியதாரர்களாக விளங்க வேண்டும். உலகத்தின் மாபெரும் உன்னத தலைவர் நமது எம் பெருமானர் முஹம்மது நபி(ஸல்) வழியில், என்றென்றும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன். இந்த பொன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நம்மால் இயன்ற பொருளுதவியை இல்லாதவருக்கு வழங்கியும், நம் நாட்டில் மேன்மேலும் சகோதரத்துவமும், சமாதானமும் திளைத்தோங்க, நாட்டு மக்கள் அனைவரும் உடல், உள்ளம் நலம் பெற உறுதிபூண்டு, வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

