அரசம்பட்டியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா.

அரசம்பட்டியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழக துணை பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கேபி.முனுசாமி பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் அரசம்பட்டி ஓம் சக்தி கோவிலில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அன்னதானம் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. கே.அசோக்குமார் கலந்து கொண்டு நல திட்ட உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பையூர் ரவி,திருமால் முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, அம்மா பேரவை செயலாளர் மாதையன், இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி ஒன்றிய கழக பொருளாளர் ராமன் தொழிலதிபர் பழனி சார்பு அமைப்பு ஒன்றிய கழக செயலாளர்கள் கணேசன் கண்ணப்பன் ஒன்றிய கழக நிர்வாகிகள் சுரேந்திரன் சித்ரா முருகேசன் முருகையன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம் சக்திவேல் மற்றும் செந்தில்குமார் தயாளன் சிவக்குமார் கோகுலக்கண்ணன் குமார் ஞானபிரகாசம் சங்கர் கணேசன் பழனி பெரியசாமி தண்டபாணி சீனிவாசன் முருகன் வீரப்பன் துரைசங்கர் விக்னேஷ் சக்திவேல் ரஞ்சித்குமார் செல்வம் ஜெகதீசன் சிராஜ் அமுதன் ஜெய்ஹிந்த் மற்றும் கழக உடன் பிறப்புகள் ஊர்பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story