காவேரிப்பட்டணம் அருகே மாணவி மாயம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள ஜெய்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவம் அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் இல்லாததால் இதுகுறித்து பெற்றோர் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் மாணவி ஒரு வாலிபருடன் செல்போனில் பேசி வந்ததாகவும், அந்த வாலிபர் தான் ஆசை வார்த்தை கூறி மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story

