சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் அதிக அளவு மது குடித்த முதியவர் சாவு

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் அதிக அளவு மது குடித்த முதியவர் சாவு
X
போலீசார் விசாரணை
சேலம் அன்னதானப்பட்டி சண்முக ஜங்ஷன் பாலத்தின் அடியில் 65 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சடலமாக மீட்கப்பட்டவர் ஓமலூர் தொளசம்பட்டி அருகே பெரியாரிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பதும், இவர் மூட்டை தூக்கும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் அதிக அளவு மது அருந்திய அவர் உயரிழந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story