நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

X
NAMAKKAL KING 24X7 B |7 Jun 2025 7:42 PM ISTதமிழ்நாடு முதலமைச்சர் "நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை" விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பாராளுமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்) கே.இ.பிரகாஷ் (ஈரோடு) , சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) , மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.8.30 கோடி மதிப்பில் 13 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்றைய தினம் முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடமும், நாமக்கல் தொகுதி முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடமும், சேந்தமங்கலம் தொகுதி பொட்டணம் பகுதியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார துணை மையம், சேந்தமங்கலம் தொகுதி பேளுக்குறிச்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், முத்துகாபட்டியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார துணை மையம், ராசிபுரம் தொகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் என ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் தொகுதி களங்காணி நத்தமேடு பகுதியில் 2 சுகாதார துணை மையம், பரமத்தி வேலூர் தொகுதியில் ஜேடர்பாளையம், நல்லூர் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், மாணிக்கம்பாளையம், பாலப்பட்டி பகுதிகளில் வட்டார பொது சுகாதார அலகு, வேலகவுண்டம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம், திருச்செங்கோடு தொகுதி வையப்பமலையில் ஆரம்ப சுகாதார நிலையம், மல்லசமுத்திரம் பகுதியில் வட்டார பொது சுகாதார அலகு, கோழிக்கால்நத்தத்தில் சுகாதார துணை மையம், சேந்தமங்கலம் தொகுதி வரகூர், கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் 2 சுகாதார துணை மையம், ராசிபுரம் தொகுதி நாமகிரிப்பேட்டையில் வட்டார பொது சுகாதார அலகு என ரூ.8.30 கோடி மதிப்பில் 13 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் ரூ.360.75 கோடி மதிப்பீட்டிலான மருத்துவத்துறை பணிகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் 8 நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள்,• ரூ.3.51 கோடி செலவில் 14 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், •ரூ.5.96 கோடி செலவில் 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதார அலகுகள், செவிலியர் குடியிருப்பு மற்றும் கூடுதல் கட்டிடங்கள்,• ரூ.1.50 கோடி செலவில் - குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு வசதிகள் கொண்ட புதிய கட்டிடம்,•ரூ.45 இலட்சம் செலவில் கொல்லிமலை அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி, ரூ.2.33 கோடி செலவில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், சி.டி ஸ்கேன், சி ஆர்ம் ஆகிய கருவிகள்• ரூ.345 கோடி செலவில் - நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல ரூ.110.95 கோடி செலவில் 20 மருத்துவ கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.23.75 கோடி மதிப்பில் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மிகசிறப்பான முறையில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் அரசு சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில், ஏராளமான பொதுமக்கள் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை, நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவனையை விட கூடுதலான செயல்பாடுகள் இம்மருத்துவனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல பரமத்தியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ரூ.50 இலட்சம் மதிப்பில் கபிலர்மலை வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.33 இலட்சம் மதிப்பில் கூடச்சேரி துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.1,018 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று அறிவித்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 2 அரசு தலைமை மருத்துவமனைகள் வேண்டும் என்ற கோரிக்கையினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வைத்தார். அதனடிப்படையில் ரூ.53.39 கோடி மதிப்பில் இராசிபுரம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு தன்னிறைவு பெற்ற மருத்துவமனையாக பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.23 கோடி மதிப்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல நாமக்கல் தொகுதி நரிக்குறவர் காலனியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம், மோகனூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையக் கூடுதல் கட்டிடம், வினைதீர்த்தபுரம் பகுதியில் வட்டார பொது சுகாதார அலகு, கீரம்பூர் பகுதியில் துணை சுகாதார நிலைய கட்டிடம், திண்டமங்கலம் பகுதியில் துணை சுகாதார நிலைய கட்டிடம் பணிகள் நடைபெற்று வருகிறது. கொல்லிமலை, பள்ளிபாளையம் மற்றும் வெண்ணந்தூர் பகுதியில் தலா ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடம் கட்டும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அதிகளவில் மருத்துவத்துறையில் கட்டிடங்கள் கட்டும் பணியில் உள்ள மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் இடம்பெறும் என்கின்ற வகையில் இன்றைய தினம் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் நம்மை காக்கும் 48, கலைஞரின் வரும்முன் காப்போம், இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற மிக மகத்தான திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் என்கின்ற வகையிலும், தமிழ்நாட்டி செயல்படுத்துகின்ற திட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கு அடித்தளமான திட்டங்களாக அமைந்துள்ளது. இல்லம் தேடி கல்வி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் சிறப்பான திட்டமாக அமையும். முழுஉடல் பரிசோதனை மூலம் முழுமையாக உடலை பாதுகாக்கும் வகையில், அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல், பல், கண், வாய் மருத்துவம், இயன் முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மிகச்சிறந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு 3 என்கின்ற வகையில் 1164 இடங்களிலும், சென்னை மாநகராட்சியில் 15, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் 20, 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் 57 என 1256 இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் இம்முகாம்களில் கண்டறியப்பட்டு, வருவாய்த்துறை அலுவலர்களின் சான்றிதழ் பெற்று, அவர்களுக்கான ஆணைகள் வழங்கப்பட இருக்கிறது. காப்பீட்டு திட்டத்தின் புதிய காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படவுள்ளது. அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரு குடையின் கீழ் இருக்கும் வகையிலான திட்டம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமாகும். இத்திட்டத்தின் அறிவிப்பினை நாமக்கல் மாவட்டத்தில் அறிவிப்பதலில் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பல முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்துள்ளார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 10 முறை வருகை புரிந்துள்ளார்கள். தற்பொழுது 11வது முறையாக முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை புரிந்துள்ளார்கள். அனைத்து தொகுதிகளிலும் சுகாதாரத்துறை கட்டிடங்கள் உட்பட வெவ்வேறு துறைகளின் சார்பில் கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டு, மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.54.00 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கிய மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தின் சார்பிலும், இராசிபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,500 மதிப்பில் சிறப்பு ஊட்டச்சத்து உருண்டை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம், மரு.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து நலப்பெட்டகம், யானைக்கல் நோய் (பைலேரியா) ஒழிப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தேசிய காசநோய் திட்டத்தின்கீழ் நிதியுதவி, பள்ளி சிறார் நலத்திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிதியுதவியாக 25 பயனாளிகளுக்கு ரூ.40,800 மதிப்பில் பல்வேறு நிதியுதவிகள் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.42,300/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, சிலுவம்பட்டியில் ரூ.345 கோடி மதிப்பீட்டில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பல்நோக்கு மருத்துவ சேவை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் செ.பூபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.சிவக்குமார், 2-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பிரபு, நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) மரு.அ.ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி, நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார், கூட்டுறவாளர் ராணா ஆனந்த் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
