செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருவள்ளூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,
திருவள்ளூர்- திருவள்ளூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த கொப்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன்- அபிராமி இவர்களுடைய மூத்த மகள் திவ்யதர்ஷினி -15 இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், திவ்யதர்ஷினி படிப்பு மீது கவனம் செலுத்தாமல் அதிகமாக தனது தாய் செல்போன் மூலமாக சமூக வலைத்தளங்களில் மூழ்கி வந்ததாக கூறப்படுகிறது, இதனால் சிறுமியை பெற்றோர்கள் கண்டித்து அவருக்கு செல்போன் கொடுப்பதை நிறுத்தி உள்ளனர், இதனால் தனக்கு தனியாக செல்போன் வாங்கி தர வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சிறுமி அடம்பிடித்து கேட்டு வந்துள்ளார், ஆனால் பெற்றோர்கள் செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளனர், இந்நிலையில் நேற்று தினம் மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த திவ்யதர்ஷினி தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட அவர் குடும்பத்தினர் கூச்சலிட்டு கதறியதால் அக்கம் பக்கத்தினர் வந்து தூக்கு கயிறு தொங்கிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளன அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் அதைத்தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்ய அமரர் அறையில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ஆனது மேற்கொண்டு வருகின்றனர் பெற்றோர்கள் செல்போன் வாங்கி தராததால் பள்ளி சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கொப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Next Story