பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு.
Paramathi Velur King 24x7 |7 Jun 2025 8:12 PM ISTபரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு.
பரமத்தி வேலூர், ஜூன்.7: நாமக்கல்லில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முடிவு பெற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவும் தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேற்று நாமக்கல் வந்தார். அவர் இன்று காலை 7.30 மணிக்கு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவின் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா எனவும் சிகிச்சை அளிப்பதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கான பிரத்தியேக வார்டு பகுதிகளில் ஆண்களை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்திய அவர் டயாலிசிஸ் மையத்தையம் ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் டயாலிசிஸ் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளாகத்தை பார்வையிட்ட அவர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஆங்காங்கே அமர்ந்திருப்பதை பார்த்து அவர்களுக்கென தனி காத்திருப்பு கூடும் அமைக்க அறிவுறுத்தினார். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என பணியில் இருந்த மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்.
Next Story


