பரமத்திவேலூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் ஊர்வலம்.

பரமத்திவேலூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் ஊர்வலம்.
X
பரமத்திவேலூர் சகன்ஷா அவுலியா தர்காவில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் ஊர்வலம் சென்றனர்.
பரமத்திவேலுார்,ஜூன்.7-     பரமத்திவேலூர் ஹஜ்ரத் சகன்சா அவுலியா தர்காவில் பக்ரீத் பண்டிகை திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக தர்காவில் இருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். தொடர்ந்து பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதில் பரமத்திவேலூர், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story