அரசு ஊழியர்களுக்கான ஊதியக்கணக்கு துவங்குதல், காப்பீடு மற்றும் இதர சலுகைகள் வழங்கல் தொடர்பான அனைத்துதுறை அலுவலர்களுக்கான விளக்ககூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் அரசு ஊழியர்களுக்கான ஊதியக்கணக்கு துவங்குதல், காப்பீடு மற்றும் இதர சலுகைகள் வழங்கல் தொடர்பான அனைத்துதுறை அலுவலர்களுக்கான விளக்ககூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கருவூலத் துறையின் சார்பில், அனைத்துதுறை அலுவலர்களுக்கான மாநில அரசு ஊதிய தொகுப்பு திட்டம் - State Government Salary Package (SGSP) தொடர்பான விளக்ககூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட கருவூல அலுவலர் பி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.05.2025 அன்று அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் படியும், மாண்புமிகு தமிழ்நாடு நிதிஅமைச்சர் அவர்களால் 2025-2026ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது வழங்கிய அறிவிப்புகளின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஊதியக்கணக்கு துவங்குதல், காப்பீடு மற்றும் இதர சலுகைகள் வழங்கல் தொடர்பான அனைத்துதுறை அலுவலர்களுக்கு State Government Salary Package (SGSP) திட்டம் தொடர்பான விளக்ககூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட SBI, IOB, IB, CB, AXIS, BOB & UBI ஆகிய ஏழு வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோர் இத்திட்டம் மற்றும் வங்கிகளால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் இத்திட்டம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அலுவலகத் தலைமை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் சுமார் 300க்கு மேற்பட்ட அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் பி.எஸ்.ஸ்ரீதர், கருவூல அலுவலர்கள், வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



