தேன்கனிக்கோட்டை: சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது- கடைக்காரர் போக்சோவில் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ருத்ரேஷ் (43) இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்த 15 வயது மதிக்கத் தக்க சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். சோர்வாக காணப்பட்ட சிறுமியை இருதுக் கோட்டை துணை சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த ருத்ரேஷ், அந்த சிறுமியை, பெற்றோருக்கு தெரியாமல் கர்நாடக மாநிலம் ஜிகினியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனை வாசலிலேயே பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தேன்கனிக் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ருத்ரேஷ் நேற்று கைது செய்தனர்.
Next Story

