ஓசூர் அருகே லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் குருவாயூரப்பா நகர் பகுதீயை சேர்ந்தவர் கதிரவன். இவருடைய மகன் ராகுல் (26) இவர் கடந்த 5-ஆம் தேதி அன்று டூவீலரில் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற லாரி டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில், ராகுல் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துமனையில் அவர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராகுல் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

