கடலில் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை - ஆலோசனை

கடலில் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை -  ஆலோசனை
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடலில் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை தொடர்பாக கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நேற்று இரவு நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா ஆலய துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபின், லாட்ஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சிங்கார் ஒய் தாமஸ், செயலாளர் கென்னடி, பொருளாளர் ராஜேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய மேயர் மகேஷ், கன்னியாகுமரியில் இது போன்று ஒரு பிரச்சினை எங்கள் கவனத்திற்கு வந்ததும் உடனடியாக துறை சார்ந்த அமைச்சர் நேருவிற்கும், முதல்வருக்கும் தகவல் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் உடனடியாக இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சர் உத்தவிட்டு உள்ளார். இது ஒரு புறம் இருக்க கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்தந்த லாட்ஜ் வளாகத்திலேயே உரிமையாளர்கள் அமைக்க வேண்டும். 15 நாட்களுக்குள் இந்த பணியை நிறைவேற்ற வேண்டும் என கூறினார். லாட்ஜ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கென்னடி பேசும்போது உரிய இடம் இருக்கும் லாட்ஜுகளில் இதை எளிதாக செய்து விடலாம். இடம் இல்லாத லாட்ஜ் உரிமையாளர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட லாட்ஜ் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story