சேலம் மாவட்டத்தில் எட்டு இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

சேலம் மாவட்டத்தில் எட்டு இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்
X
வருகிற 14-ம் தேதி நடக்கிறது மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
சேலம் மாவட்டம் முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படி இந்த ஆண்டு இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 14-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. சேலம் அஸ்தம்பட்டி உள்ள ஒருங்கிணைந்து நீதிமன்றம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு ஆகிய நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை காலை தொடங்கி நடக்கிறது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் முக்கிய நோக்கம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற முன் வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும், இலவசமாகும் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதாக, மேலும் மக்கள் நீதிமன்ற முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மற்றும் நீதிமன்ற கட்டனங்களை திரும்பப்பெறும் வாய்ப்பு உள்ளது. நீதிமன்றங்களில் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில் கீழ்க்கண்ட வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண முடியும். சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story