சேலம் மத்திய சிறையில் மூன்று கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு

சேலம் மத்திய சிறையில் மூன்று கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு
X
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் சிலருக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் ஓமலூரைசேர்ந்த ஆயுள் கைதி திருப்பதிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது இதனை அடுத்து சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் வாழப்பாடியைச் சேர்ந்த தண்டனை கைதி ஜெயராமனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அவரை உடனடியாக சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் மேட்டூரை சேர்ந்த விசாரணை கைதி முத்துசாமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். அவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 கைதிகளும் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story