கோவை: பக்ரீத் பண்டிகை- ஆயிரக்கணக்கான ஒரு இடத்தில் தொழுகை

கோவை: பக்ரீத் பண்டிகை-  ஆயிரக்கணக்கான ஒரு இடத்தில் தொழுகை
X
பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நேற்று காலை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். மஸ்ஜித் இஹ்ஷான் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி இஸ்மாயில் இம்தாதி தொழுகையை நடத்தி, இன்மையுரை வழங்கினார். இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆடு, மாடு போன்றவைகளை பலியிட்டு குர்பானி கொடுக்கும் நிகழ்வும் நடந்தது. பலியிட்ட இறைச்சி மூன்று பங்காக பிரிக்கப்பட்டு, நண்பர்கள், ஏழைகள், மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. புத்தாடை அணிந்து, வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள், உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.
Next Story