சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலிச்சாமி சீலக்காரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன் கற்கோவில் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி, நான்கு கால யாக பூஜைகள் முடிந்த பின் இன்று (ஜூன் .8)கடம் புறப்பாடாகி 51 அடி உயரத்தில் உள்ள கற்கோவிலின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். உசிலம்பட்டி மற்றும் அத்திபட்டி, வில்லாணி, பெருமாள்பட்டி, இடையபட்டி, அம்பாசமுத்திரம் புதூர், தேனி மாவட்டத்தில் உள்ள தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர். வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

