மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அமித்ஷா
மதுரைக்கு நேற்று (ஜூன்.7) இரவு வந்த மத்திய உள்துறை அமைச்சர் இன்று( ஜூன் .8) நண்பகலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தார். சுமார் அரை மணி நேரம் கோவிலில் இருந்தார். அமிர்தஷா கோவிலுக்கு வருவதால் காலை 9 மணி முதல் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கோவில் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாமலும் அப் பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க முடியாமலும் மக்கள் சிரமப்பட்டனர். அமைச்சர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யபட்டதால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story






