மது போதையில் மயங்கி விழுந்து இறந்த விசைத்தறி கூலி

மது போதையில் மயங்கி விழுந்து இறந்த விசைத்தறி கூலி
X
குமாரபாளையம் அருகே மது போதையில் விசைத்தறி கூலி மயங்கி விழுந்து இறந்தார்
குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்தவர் சண்முகம், 65. இவர் தன் மனைவி, மற்றும் குடும்பத்தாரை விட்டு பிரிந்து வந்து, வேலை செய்து, ஓட்டலில் சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். ஜூன், 6ல், இரவு 07:00 மணிக்கு, கூலி வாங்கிக்கொண்டு வந்தவர், ஜூன், 7 காலை 06:00 மணி வரை விசைத்தறி கூடத்திற்கு வராததால், பல இடங்களில் உடன் பணியாற்றுபவர்கள் தேடியுள்ளனர். அரசு மருத்துவமனை முன்பு மயங்கி கிடப்பதாக தகவலறிந்து, சென்று பார்த்துள்ளனர். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், எரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டாக்டர் கூறியதால், ஈரோடு அழைத்து சென்று, அட்மிட் செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து, இவரது மகன் ராஜ்குமார், என்பவர், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story