சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

X
Komarapalayam King 24x7 |8 Jun 2025 8:02 PM ISTகுமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம், முருங்கைக்காடு, சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, மே, 25ல், முகூர்த்தக்கால் அமைப்பது முதல் தொடங்கியது. கணபதி யாகம் மற்றும் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அம்மன் சர்வ அலங்காரத்துடன் ஊர்வலமாக, அருள்பாலித்தவாறு வந்தார். நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று காலை 07:00 மணியளவில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. கும்பாபிஷேக விழா மற்றும் யாக சாலை பூஜைகளை ஸ்ரீரங்கம் வரதராஜூ சுவாமி சிஷ்யர் ஞானமணி சர்மா குழுவினர் நடத்தினர். இந்த விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
