சேத்தூரில் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீட்பு குழுவினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீட்பு குழுவினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி பழுதானது. இதனை சரி செய்வதற்காக சேத்தூர் மாலை அம்மன் கோவில் அருகே உள்ள பழுது நீக்கும் மையத்திற்கு முன் சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் அடையாளம் தெரியாத நபர் வைத்த தீ எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஆம்புலன்ஸ் மீது பரவியது. ஏற்கனவே விபத்தில் சிக்கி பழுதான வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமானது. தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனம் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

