சிவகாசியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சிவகாசியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
X
சிவகாசியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த மாநகராட்சி பொதுக்கழிப்பறை அப்பகுதி மக்கள் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் பொதுக்கழிப்பறை இடித்து அகற்றப்பட்டதை காரணம் காட்டி சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மேயர் சங்கீதா இன்பம் ஆகியோருக்கு எதிராக மாநகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு கழிப்பறையை இடித்து அகற்றுவதில் ஆர்வம் காட்டும் அசோகன் MLA, மேயர்- சங்கீதா பொதுமக்களின் நலன் பாராமல் தொழிலதிபர்களின் கைக்கூலியாக செயல்பட்டு கழிப்பறையை இடிக்க முயற்சி ஏன்!! பாமர மக்கள் பயன்படுத்தும் பொதுகழிப்பறையை இழத்து திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலையை ஏற்படுத்த சதியா ??? ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்து தன் சுய நலத்திற்காக பதவியை தற்காத்துகொள்ள நாடகமா!!! இவையனைத்திற்கும் துணை போகும் மாவட்ட நிர்வாகமே!!! தமிழக அரசே !! ஒன்றிய அரசே நடவடிக்கை எடு! என காட்டமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
Next Story