கிரிக்கெட் போட்டியில் பாரதி வித்யாலயா பள்ளி மாணவிகள் சாதனை

X
இமாச்சலப் பிரதேசம் மராட்டா பெட்ரல் பகுதியில் நடை பெற்ற அகில இந்திய டென்னிஸ் பார்க் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி அகில இந்திய அளவில் 3-ம் இடத்தைப் பிடித்தது. தமிழக அணியில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய அவர்களை பள்ளியின் தாளாளர் பி.எஸ்.செல்ல முத்து, செயலாளர் கிருஷ்ணகுமார், முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர். இதில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

