இருக்கையிலேயே கட்டிப் போட்டுவிட்டது - ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு கிச்சா சுதீப் புகழாரம்

X
ஓடிடி தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படத்தினை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போது அந்த வரிசையில் கிச்சா சுதீப்பும் இணைந்திருக்கிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தொடர்பாக கிச்சா சுதீப், “சமீபத்திய படங்களில் மிகச் சிறந்த எழுந்து மற்றும் செயல்பாடு. கதை சொல்லும் விதத்தில் நிச்சயமாக ஒரு மைல்கல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம். இப்படம் என்னை இருக்கையிலேயே கட்டிப்போட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் சொந்த தருணத்திற்கான இடமும் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகர்களால் குறைபாடு இல்லாமல் சித்திரித்திருக்கிறார்கள். அருமையான நடிகர்கள் தேர்வு மற்றும் படத்தின் இசை பெரிய சொத்து” என்று தெரிவித்துள்ளார்.
Next Story

