வீட்டுக்கு நிதி வழங்கிய எம் எல் ஏ

X
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி 8-வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் மனேகாரன் என்பவர் வீடு அன்மையில் பெய்த பலத்த மழையினால் இடிந்த விழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரத்திடம் வீட்டினை செப்பனிட்டு தர கோரிக்கை வைத்தார். கோரிக்கையினை ஏற்ற எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5.50 இலட்சம் நிதி உதவி அளித்து, புதிதாக கட்டப்பட்ட காமராஜர் இல்லம் என்ற வீட்டினை நேற்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அருகில் ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி மன்ற தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

