குமரி இளைஞர் காங். தலைவர் தேர்தல்

குமரி இளைஞர் காங். தலைவர் தேர்தல்
X
டைசன் வெற்றி
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஜனவரி 18-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 27-ம் தேதி வரை நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்  மாநில தலைவர், பொதுச் செயலாளர், மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி தலைவர்கள், மண்டல தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த அளவில் மாவட்டத்தை மூன்றாக பிரித்து பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் இதற்க்கு முன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்த டைசன் மாநகர் மாவட்ட  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவரை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உட்பட கட்சி நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story