கமல்ஹாசனின் கருத்து சர்ச்சை -பா.ஜ.க போஸ்டர்களால் பரபரப்பு !

கமல்ஹாசனின் கருத்து சர்ச்சை -பா.ஜ.க போஸ்டர்களால் பரபரப்பு !
X
தமிழ் எங்கள் உயிர்மொழி கன்னடம் எங்கள் தாய்மொழி என பாஜகவினர் கோவையில் ஒட்டி உள்ள போஸ்டர்களால் பரபரப்பு.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் செய்தியொன்றில் தெரிவித்த கருத்து, கர்நாடகத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் தமிழகத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை பா.ஜ.க தெற்கு மாவட்டம் சார்பில், தமிழ் எங்கள் உயிர்மொழி, கன்னடம் எங்கள் தாய்மொழி. கன்னடமொழி விரோதி கமல்ஹாசனை மற்றும் தி.மு.க கூட்டணிகளை கண்டிக்கிறோம் எனக் கூறும் போஸ்டர்கள் கோவை மற்றும் சிட்கோ பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. பேச்சிற்காக பின்வாங்கப்போவதில்லை எனக் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவையில் பாஜகவினர் போட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story