குமாரபுரத்தில் புதிய காவல் சோதனைச் சாவடி

X
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனை சாவடி நிறுவப்பட்டிருந்தது. சோதனை சாவடியை தரம் உயர்த்த எஸ் பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் தரம் உயர்த்தப்பட்ட காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதனை உள்ளிருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை நேற்று எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார், ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
Next Story

