தகராறு தொடர்பாக பெண் வனவர் பணியிட மாற்றம்

தகராறு தொடர்பாக பெண் வனவர் பணியிட மாற்றம்
X
கொடைக்கானல் குணா குகை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பெண் வனவர் பணியிட மாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகை பகுதியை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோது அனுமதி சீட்டு பெறுவதில் சுற்றுலாப் பயணிகளுக்கும் வனத்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு பிரிவினரும் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வனத்துறையின் பெண் வனவர் மாசானமுத்து உள்ளிட்ட வனத்துறையினர் தாக்கியது குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைத் தொடர்ந்து பெண்வனவர் மாசானமுத்து விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
Next Story