சிறு விளையாட்டரங்கத்தின் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

மதுரை மேலூரில் சிறு விளையாட்டு அரங்கத்தின் பணிகளை வணிகவரித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதி கருத்தப்புலியன்பட்டி கிராமத்தில் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள " முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்" பணிகளை இன்று (ஜூன்.9) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நகராட்சி சேர்மன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story