ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமானவரி தொழில்நுட்ப பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், 21 முதல் 30 வயது வரை உள் ளவர்களாகவும், 2021-ம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும். மேலும் சென் னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

