திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உயிரிழந்தார்

X
திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன். 58 வயதான இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் குணசேகரன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனென்று இன்று இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இவருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த இவர். 2011 முதல் 16 வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார். 2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார். அவரது உடல் மதியம் 12 மணிக்கு திருப்பூர் ராக்கியபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
Next Story

