மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு முகாம்

மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு முகாம்
X
குமரியில் நாளை துவக்கம்
குமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள் உட்பட பல சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம். இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை அவசியம். கிராமங்கள் தோறும் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம்கள் நடத்திட மாவட்ட கலெக்டர் அளவு மீனா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் முகங்கள் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக நாளை (10ம் தேதி) குறும்பனை மீனவர் சங்கத்திலும், 11ம் தேதி மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம், 12ம் தேதி புத்தளம் பேரூராட்சி அலுவலகம், 13ம் தேதி கன்னியாகுமரி நகராட்சி அலுவலகம், 16ம் தேதி தோவாளை ஊராட்சி அலுவலகம், 17ம் தேதி இடைக்கோடு பேரூராட்சி அலுவலகம், 18ம் தேதி கடையால் பேரூராட்சி அலுவலகம், 19ம் தேதி களியக்காவிளை பேரூராட்சி அலுவலகம், 20ம் தேதி குழித்துறை நகராட்சி அலுவலகம், 23ம் தேதி மஞ்சாலுமூடு தொடக்கப்பள்ளி, 24ம் தேதி நாகர்கோவில் பழைய மாநகராட்சி அலுவலக கட்டிடம், 26ம் தேதி வடிவீஸ்வரம் புதிய மாநகராட்சி அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது. முகமிற்கு வருகை தரும் பொதுமக்கள் வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு நகல், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல் உள்ளிட்டவைகளை முகாமிற்கு கொண்டு வர வேண்டும்.
Next Story