ஆத்துமேடு அருகே டூ வீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
ஆத்துமேடு அருகே டூ வீலர் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து.இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா , தொண்டமாங்கினம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் வயது 31. அதே பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 62 . இவர்கள் இருவரும் ஜூன் 8-ம் தேதி காலை 11.30 மணி அளவில், அரவக்குறிச்சி -பாளையம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் ஆத்துமேடு அருகே சென்ற போது , எதிர் திசையில் அரவக்குறிச்சி தாலுகா , ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்த நிதிஷ் வயது 20 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் , மணிமாறன் ஒட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் மணிமாறன் , முருகன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மணிமாறன் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , காரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர் நிதிஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story




