கபிலர்மலை, நல்லூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

X
Paramathi Velur King 24x7 |9 Jun 2025 8:23 PM ISTகபிலர்மலை, நல்லூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
பரமத்தி வேலூர், ஜூன்.9: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக நாளை (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்ட மங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளை யம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளி பாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். இதே போல் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு காரணமாக நாளை (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலவரம், ராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளை யம், நடந்தை, திடுமல், கவுண்ட ம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூர் சித்தாளந்தூர், பெருங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story
