பாலியல் சீண்டல் ஈடுபடுத்துவதாக பெண் ஆட்சியரிடம் மனு

பாலியல் சீண்டல் ஈடுபடுத்துவதாக பெண்  ஆட்சியரிடம் மனு
X
பாலியல் சீண்டல் ஈடுபடுத்துவதாக பெண் ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் சுகாதார அலுவலக கண்காணிப்பாளர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக இளநிலை உதவியாளர் பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஷோபா(39) என்பவர் அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் கடந்த இரண்டாம் மாதம் பணியில் சேர்ந்ததாகவும் அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் கணபதி என்பவர் தன்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் அதுமட்டுமில்லாமல் தன்னை இராணி போல பார்த்துக் கொள்கிறேன் என அறுவருக்கத்தக்க வார்த்தையில் பேசுவதாகவும் மேலும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது பணிக்கு சேர்ந்த நாள் முதலே பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு
Next Story