பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை
பெரம்பலூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயில உதவி மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி 88072 62766 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையினை சார் ஆட்சியர் சு.கோகுல் இன்று (09.06.2025) தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்படுகின்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 - 25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டல் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவ படிப்புகள், பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகள் தொடர்பான ஆலோசனைகள் பெறுவதாவற்கும், பெற்றோர் இல்லாத மாணவர்கள் உயர்கல்வி பயில நிதி உதவி கேட்பது தொடர்பாக நேரிலோ அல்லது தொலைப்பேசியிலயோ கேட்பதற்காக உயர்கல்வி வழிகாட்டல் மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி 88072 62766 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தகவல் பெற்று பயன் பெறலாம். இன்று தொடங்கப்பட்ட உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு மையம் மூலமாக பெற்றோர் இல்லாத மாணவர்களான அய்யனார்பாளையம், கிராமத்தை சேர்ந்த செல்வி. சௌந்தர்யா, வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த செல்வன். அகிலன் ஆகியார்களுக்கு கட்டுப்பாட்டு அறை மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கோவிந்தராஜபட்டனம் கிராமத்தை சேர்ந்த நந்தக்குமார் என்ற மாணவன் பாலிடெக்னிக் கல்லூரியிலும் சேர்க்கை செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயில உதவி மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ம.செல்வக்குமார்,, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் கி.ஜெய்சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கல்வித்துறை நேர்முக எழுத்தர் குமார், உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மகாதேவன் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




