வயிற்று வலியால் கல்லூரி மாணவி தற்கொலை

X
Komarapalayam King 24x7 |9 Jun 2025 8:53 PM ISTகுமாரபாளையத்தில் வயிற்று வலியால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, கருப்புசாமி நகரில் வசிப்பவர் கனிமொழி, 20. பவானி அருகே தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று வீட்டு வேலை செய்து வரும் இவரது அம்மா லட்சுமி, 60, உறவினர் வீட்டு திருமணத்திற்காக தருமபுரி சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத போது, பல வருடமாக, வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட, கனிமொழி, நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில், வீட்டின் பனங்கை சட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டிக்கொண்டார். இவரை பார்க்க வந்த தோழி கௌரி, தூக்கில் கனிமொழி தொங்குவதை கண்டு, கத்தியால் சேலையை அறுத்து, கீழே படுக்க வைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வரவழைத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, இவரை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து, கனிமொழியின் அம்மாவுக்கு தகவல் தர, அவரும் நேரில் வந்து, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
