குன்னூர் லேம்ஸ்ராக் சாலையில் குப்பைத் தொட்டியில் உணவு தேடும் காட்டெருமை – வைரலாகும் வீடியோ, வன ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி!

X
குன்னூர் லேம்ஸ்ராக் சாலையில் குப்பைத் தொட்டியில் உணவு தேடும் காட்டெருமை – வைரலாகும் வீடியோ, வன ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி! நீலகிரியின் குன்னூரில், இயற்கை அழகுடன் கூடிய லேம்ஸ்ராக் சாலை பகுதியில் உணவுக்காக காட்டெருமை குப்பை தொட்டியில் உணவு தேடும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. குறிப்பாக குப்பைத் தொட்டியில் தடுமாறி உணவுத் தேடும் காட்டெருமை நடத்தை பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்சியிலும் ஆழ்த்தியுள்ளது. காட்டெருமை ஒன்று, சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியை நாசமாக்கி, அதில் உள்ள கழிவுச்சிறு உணவுகளை அகற்றி உண்ணும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. அருகே கார்கள் நின்றுள்ளன, பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் நிசப்தமாகத் தூரத்தில் இருந்து இந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பொதுவாக காட்டெருமைகள் காடுகளுக்குள் மட்டுமே சுற்றி வருவது வழக்கம். ஆனால் சமீப காலங்களில் உணவுக் குறைவும், காடுகளில் உள்ள வாழ்விட மாற்றங்களும் காரணமாக, அவை நகர்ப்புற பகுதிகளுக்குள் அடிக்கடி ஊடுருவுகின்றன. வனஆர்வலர்கள் அதிர்ச்சி மற்றும் கோரிக்கைகள்: இக்காட்சிகள் பரவியவுடன் வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்: • சாலையோர குப்பை தொட்டிகளை மூடியதாக மாற்ற வேண்டும் • உணவுக்கழிவுகளை வெளியே போடுவதை கட்டுப்படுத்த வேண்டும் • வனத்துறை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் காடுகளில் உணவுக்கிடைக்காத நிலை, மனித வாழ்க்கைமுறையில் உணவுக் கழிவுகள் அதிகரித்தல், கட்டுப்பாடில்லாத குப்பை மேலாண்மை ஆகியவை, காட்டுவிலங்குகளை நகர்ப்புறமாக இழுத்து வருகின்றன. இது மனித-விலங்கு இடையீடுகளுக்கு வழிவகுக்கும் பெரும் எச்சரிக்கையான சூழ்நிலையை உருவாக்குகிறது என வன ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்
Next Story

