பலூனுக்கு காற்று அடித்த போது சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்

பலூனுக்கு காற்று அடித்த போது சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
X
பலூனுக்கு காற்று அடித்த போது சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கெங்கபிராம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலன். இவருடைய மனைவி பூங்கொடி (40) பலூன் வியாபாரியான. இவர் சம்பவம் அன்று பெரிய கவுண்டனூர் மாரியம்மன் கோவில் விழாவின் போது பலூன் விற்க சென்றுள்ளார். பலூன்களில் ஹீலியம் வாயுவை நிரப்பி கொண்டிருந்தாபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்தது. இதில் பூங்கொடிக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story