உளுந்து பயிா்களுக்கான நஷ்ட ஈடு தொகையை வழங்க விவசாயிகள் கோரிக்கை

X

எம்,எல்,ஏ.யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில அருகே வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதியில் சேதமடைந்த உளுந்து பயிா்களுக்கு அரசு நஷ்ட ஈடு தொகையை உடனே வழங்க வேண்டும் என தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏவிடம் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம் வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதி பொதுமக்களாகிய நாங்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு விவசாயிகள் உளுந்து பயிரிட்டிருந்தாா்கள். பருவநிலை மாற்றத்தினால் பெய்த கனமழையில் பயிா்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள் பெரிதும் நஷ்டத்திற்கு ஆளாகினா்.அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இயலாத நிலையில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறாா்கள்.எனவே பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவா்கள் கூறியுள்ளனா். மனுவை பெற்றுக் கொண்ட ஈ.ராஜா எம்எல்ஏ இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
Next Story