கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கைது
X
பல்லடத்தில் கஞ்சா வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்த போலீசார்
திருப்பூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன் பாட்டை தடுக்க போலீசார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகன சோதனையும் செய்து அவ்வப்போது கிலோ கணக்கில் புகையிலைப்பொருட்களும் கஞ்சாவும் நீயோல் பறிமுதல் செய்த வருகின்றனர். இந்நிலையில் பெருமாநல்லூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதாக பல்லடம் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையிட்டனர். சோதனையில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் நீயோல் (வயது 25) என்பதும், திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை செய்து கொண்டு ஆறுமுத் தாம்பாளையம் - கரைப்புதூர் செல்லும் சாலையில் உள்ள குடோன் ஒன்றில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சஞ்சய் குமார் நீயோலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோல் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, பஸ் நிறுத்தத்தில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோடமுயன்றார். அவரை விரட்டிப் பிடித்த போலீசார், அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் கையில் இருந்த பையில் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டூன் பெகரா என்பவரது மகன் ஆகாஷ் பெகரா (வயது 25) என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story