காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

X

புதுப்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏறாலமான பக்தர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் அமைந்துள்ளது புதுப்பட்டி கிராமம் இதன் அருகே உள்ள ஜெயம் நகர் பகுதியில் புதியதாக ஸ்ரீ காளியம்மன் , ஸ்ரீ மீனாட்சி அம்மன், துர்க்கை அம்மன், ஸ்ரீ முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோயில் கட்டி கும்பாபிஷேக விழா வானது நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பம்பை ராமேஸ்வரம் கொடுமுடி காசி பல்வேறு முக்கிய தளங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு முதல் யாக கால பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழாவானது தொடங்கியது பின்னர் இரண்டாம் கால வேள்வி யாக பூஜை செய்யப்பட்டு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரானது மேளதாளா வாத்தியங்கள் முழங்க கருட பகவான் வானில் வட்டமிட்ட, ஓம் சக்தி பராசக்தி ஓம் காளி ஜெய் காளி என்று பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது இந்த திருவிழாவை காண திண்டுக்கல் திருச்சி கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளிட்ட திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர் . இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story