பிள்ளைகளுடன் பெற்றோர் தர்ணா

X

தர்ணா
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் சிலர், தங்களது பிள்ளைகளுடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அங்கு மதியம் 12:10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாதுகாப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி மனு அளித்துச் செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்படி 12:15 மணியளவில் தர்ணாவை கைவிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: ஆதனுார் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரயராக பணிபுரிந்த அருள்தாஸ் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார்.அருள்தாஸ் பணியில் இருந்த போது, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் 2 தற்காலிக ஆசிரியர்களை நியமித்தார்.அருள்தாஸ் ஓய்வு பெற்ற பிறகு புதிய தலைமை ஆசிரியர் நியமிக்காமல், செம்மனங்கூர் பள்ளி ஆசிரியர் கூடுதல் பொறுப்பாக ஆதனுார் துவக்கப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டார். ஆதனுார் துவக்கப் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி 2 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், பள்ளியின் நிர்வாக செயல்பாடு மோசமாக உள்ளது. எனவே, பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story