கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்

X

வழங்கல்
கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளரிடம், கூட்டுறவு நகர வங்கியின் மொத்த லாப தொகையில் 5 சதவீத தொகைக்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.திருக்கோவிலுார் கூட்டுறவு நகர வங்கி கடந்த 2023-24ம் ஆண்டில், 80 லட்சத்து 57 ஆயிரத்து 341 ரூபாய் லாபத்தை பெற்றது. லாப தொகையில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கு 3 சதவீதம், கல்வி நிதிக்கு 2 சதவீதம் என மொத்தம் 5 சதவீத தொகையை கூட்டுறவு ஒன்றியத்திற்கு தர வேண்டும். அதன்படி, மொத்த லாப தொகையில் 5 சதவீத தொகை 4 லட்சத்து 2,867 ரூபாய்க்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.
Next Story