திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
X
முகாம்
கள்ளக்குறிச்சியில் வரும் 26ம் தேதி திருநங்கைகளுக் கான சிறப்பு முகாம் நடக்கிறது. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை களுக்கான சிறப்பு முகாம் வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.முகாமில் திருநங்கை அடையாள அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை, பான் கார்டு, இலவச வீட்டுமனை பட்டா, மானியத்துடன் கூடிய கடன் வசதி ஆகியவற்றை பெற திருநங்கைகள் விண்ணப்பம் செய்யவும், திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்ட திருநங்கைகள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story