மனை பட்டா ரத்து செய்யக்கோரி மனு

X

மனு
நீலமங்கத்தில் கல்லடி சமூகத்தை சேர்ந்த மக்கள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பிற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தோராய பட்டா வழங்கபட்டுள்ளதாக புகார் தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனு விபரம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் கடந்த 1997ம் ஆண்டு கல்லடி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 80 பேருக்கு, நீலமங்கலம் கிராமத்தில் வீட்டு மனை ஒப்படை வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். அங்கு கல்லடி சமுதாயம் மற்றும் பொது நன்மைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை, மற்ற இனத்தைச் சேர்ந்த 25 பேருக்கு நத்தம் நிலவரி திட்டத்தில் தோராய பட்டா ஒப்படை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story