வழித்தடம் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் மனு

வழித்தடம் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் மனு
X
மனு
சின்னசேலம் அருகே வழித்தடத்தில் பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சின்னசேலம் அடுத்த மூனாங்கன்னி குட்டைக்காடு பகுதி மக்கள் அளித்த மனு:கடந்த 51 ஆண்டுகளாக நிலத்தின் வழியாக எங்களது வீடுகளுக்கு செல்கிறோம். நாங்கள் வழித்தடமாக பயன்படுத்தி வரும் இடத்தை தனி நபர் ஒருவர் மறித்துள்ளார். இதனால் எங்களது குடியிருப்புக்கு செல்ல வழியின்றி தவிக்கிறோம். எனவே, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வழித்தடத்தில் பாதை அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story